மஞ்சள் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

மஞ்சள் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை நீக்க கெமிக்கல் கலந்த க்ரீம் உள்பட பல்வேறு முறைகளை கடைபிடித்து வருகின்றனர். இந்த முறை சரிதானா? காலங்காலமாக நமது பெண்கள் கடைபிடித்த மஞ்சள் பூசும் முறைக்கு பதிலாக இந்த கெமிக்கல் கலந்த க்ரீமை பயன்படுத்துவதால் பல தீங்குகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் மஞ்சள் பூசுவதால் வேறு என்னென்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்

பெண்கள் மஞ்சள் பூசி குளிக்கும் முறையை மீண்டும் கடைபிடித்தால் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு, நல்லதொரு பாதுகாப்புக் கவசம் கிடைக்கும்.

தினந்தோறும் மஞ்சள் பூசி குளிப்பதால் உடலில் முடி தோன்றாமல் இருப்பது மட்டுமின்றி தோலில் பாதிப்பு உண்டாகாமல் ‘பள பள’வென ஜொலிக்கும் தேகத்தைப் பெறலாம்.

மேலும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மஞ்சள் தேய்த்துக் குளித்து வருவதால் பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகள் நீங்கும். மேலும் ஈரமான இடங்களில் தொடர்ந்து இருப்பதால் உண்டாகும் சேற்றுப் புண் வராமலும் தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.