மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து விலகிய கட்சி!

அதிமுக திமுகவுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் என்ற கூட்டணி உருவாகி இருப்பது என்பதும் கமல்ஹாசன் தலைமையிலான இந்த கூட்டணியில் சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் கட்சி இணைந்து உள்ளது என்பதும் தெரிந்ததே

அதுமட்டுமின்றி வேறு சில கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்து இருந்த நிலையில் தற்போது இந்த கூட்டணியில் இருந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி என்ற கட்சி விலகியுள்ளது
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு இளைஞர் கட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது

தொகுதி பங்கீட்டில் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் இந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.