மக்கள் கருத்துதான் முக்கியம்: கருத்துக்கணிப்பு முடிவு குறித்து கே.எஸ்.அழகிரி

மக்கள் கருத்துதான் முக்கியம்: கருத்துக்கணிப்பு முடிவு குறித்து கே.எஸ்.அழகிரி

நேற்று வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ள நிலையில் இந்த கருத்துக்கணிப்பு குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

கருத்துக்கணிப்பை விட மக்களுடைய கருத்தைத்தான் நாங்கள் முக்கியமானதாக கருதுகிறோம். கடந்த 4 தேர்தல்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எதுவும் சொன்னபடி நடக்கவில்லை

இவ்வாறு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply