மக்களவை தேர்தல்: சோனியா காந்தி, ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் அமேதி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த முதல் பட்டியலில் குஜராத் மாநிலத்தில் 4 வேட்பாளர்களையும், உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது, சோனியா ராகுல் தவிர காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் உத்திரபிரதேச மாநிலத்தின் ஃபர்ரூகாபாத் தொகுதியிலும், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பரத்சின்ஹ் எம். சோலான்கி ஆனந்த் தொகுதியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply