மக்களவை தேர்தலுக்கு பின் ஸ்டாலின் அறிவித்த முதல் போராட்டம்

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பின்னர் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்த முதல் போராட்டமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜூன் 12-ம் தேதி இந்த் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கு, திமுக ஆதரவளிக்கும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் இந்த மனித சங்கலி போராட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply