மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் இடையே மெர்சல் விஜய்

மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ படத்தின் இடையே மெர்சல் விஜய்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர் திரைப்படம் இன்று சென்சார் ஆகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இடைவேளையின்போது விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீசர் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி அதே தினத்தில் வெளியாகும் விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’ படத்தின் இடைவேளையிலும் மெர்சல் விஜய் திரையில் தோன்றவுள்ளார்.

மேலும் ‘மெர்சல்’ படத்தின் டீசர் இணையதளங்களில் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply