மகிழ்ச்சி ஆனால் வருத்தம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முக ஸ்டாலின்

இந்திய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடுவது குறித்த செய்தியை, தி.மு.கழகம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றது; அதே வேளையில், செம்மொழியாம் தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதிருப்பது வருத்தமளிக்கின்றது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழிலும் வழங்குக என கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர விசிக எம்பி ரவிகுமார் மனு. இதுகுறித்து ரவிகுமார் எம்பி தனது டுவிட்டரில், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில் செம்மொழியான தமிழ் இந்தப் பட்டியலில் விடுபட்டிருப்பது அநீதி என்று தெரிவித்துள்ளார்.

ரவிகுமார், திமுக எம்பி, ஸ்டாலின், தமிழ்

Leave a Reply