மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர் ஆகிறார் ஆதித்யா தாக்கரே?

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இம்மாநிலத்தில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவர்களை சந்தித்தது இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கவும், முதல்வர் பதவியை ஆதித்யா தாக்கரே மற்றும் சரத்பவார் ஆகிய இருவரும் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது

இதனையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் இணைந்து மகாராஷ்டிராவில் மெகா கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கபப்டுகிறது. சிவசேனாவின் இந்த திடீர் நடவடிக்கையால் பாஜக வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன

Leave a Reply