ப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு முன்னரே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுவிட்டதால் முன்ஜாமீன் மனுவுக்கு பதிலாக ஜாமீன் மனுவை ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ப.சிதம்பரம் அவர்களை வரும் 26ஆம் தேதி வரை காவலில் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply