ப.சிதம்பரம் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: சி.பி.ஐ வாதம்

ப.சிதம்பரம் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: சி.பி.ஐ வாதம்

ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதில் ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், அவர் தனது காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் நீதிமன்ற நடைமுறைகளை சிதம்பரம் தரப்பு முறையாக பின்பற்றவில்லை என்றும், சிதம்பரத்திற்கு சாதகமாக உத்தரவு கொடுத்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சிபிஐ தரப்பு வாதமாக பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு மீது செப்.5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்

Leave a Reply