ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது! இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்தில் இன்று மதியம் ப.சிதம்பரம் ஆஜர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ப.சிதம்பரத்தை அதிகாலையில் எழுப்பிய சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

காலையில் அவரிடம் இருந்து அடிப்படை தகவல்களை பெற சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ப.சிதம்பரம் முறையாக ஆஜராகி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கேட்கப்பட வாய்ப்புள்ளது. ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு தற்போது தேவையற்றதாகிவிட்டது

Leave a Reply