ப.சிதம்பரத்தை கைது செய்வது குறித்து டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ப.சிதம்பரத்தை கைது செய்வது குறித்து டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம் கொடுத்த டெல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை் குழுவின் ஒப்புதலை பெறாமல் இந்த முதலீடு செய்யப்பட்டதாகவும், அதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு, பிரதிபலனாக, கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published.