ப.சிதம்பரத்திற்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்: பிரியங்கா காந்தி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரம் வேட்டையாடப்படுவதாகவும், நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர் ப.சிதம்பரம் அவர்கள் பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியவர் என்றும் உண்மை எப்போதும் வெற்றி பெறும் என்றும் ப.சிதம்பரம் அவர்களுக்கு எந்த நேரத்திலும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்றும் பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார்.

Leave a Reply