ப.சிதம்பரத்திற்கு எத்தனை வங்கி கணக்குகள்: அமலாக்கத்துறை தகவல்

ப.சிதம்பரத்திற்கு எத்தனை வங்கி கணக்குகள்: அமலாக்கத்துறை தகவல்

ப.சிதம்பரம் அவர்களுக்கு வெளிநாட்டில் 17 வங்கி கணக்குகளும், 10 அசையா சொத்துகளும் இருக்கின்றன என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என சிதம்பரம் கூறினாலும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்தோம் என சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா வாதாடினார்

ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிவரை அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்ததற்கு எதிரான கபில்சிபலின் முறையீடு குறித்து திங்கள்கிழமை விசாரணை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

Leave a Reply