போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்கள்

போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்த பல பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் 2 பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்று வழிபாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 3:45 மணியளவில் இரண்டு பெண்கள் சபரிமலையில் கோயிலுக்குள் சென்று வந்த வீடியோ வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தரிசனம் செய்த இரண்டு பெண்களின் பெயர்கள் பிந்து மற்றும் கனக துர்கா என்றும், இருவருக்கும் தரிசனத்திற்கு பின்னரும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.