போலி ட்விட்டர் அக்கவுண்ட்:

சுஷாந்த்சிங்கின் குடும்பத்தினர் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அதே நேரத்தில் அவரது தற்கொலைக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது

இந்த நிலையில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என ஒரு சுஷாந்த்சிங்கின் தந்தை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஒரு செய்தி மிக வேகமாக பரவியது

ஆனால் இதுகுறித்து சுஷாந்த்சிங்கின் குடும்பத்தினர் தெரிவிக்கையில் சுஷாந்த்சிங்கின் தந்தைக்கு எந்தவிதமான ட்விட்டர் அக்கவுண்ட்டும் இல்லை என்றும் அது போலி அக்கவுண்ட் என்றும் தாங்கள் சுஷாந்த் சிங் மரணம் குறித்து எந்தவிதமான கோரிக்கையையும் எழுப்பவில்லை என்றும் அந்த அக்கவுண்டில் உள்ள அனைத்து டுவிட்டுகளுக்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்

இதனை அடுத்து சுஷாந்த்சிங்கின் பெயரில் யாரோ மர்ம நபர்கள் போலி ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது

Leave a Reply