போர் வருவதற்கு இன்னும் காலம் கனியவில்லையா? ரஜினிக்கு ஜோதிமணி கேள்வி

போர் வருவதற்கு இன்னும் காலம் கனியவில்லையா? ரஜினிக்கு ஜோதிமணி கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று
அறிவித்தார். மேலும் தனக்கு வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல்தான் இலக்கு என்றும், வரும் பாராளுமன்ற தேர்தலில்
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவரவர் விருப்பத்தின்படி வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்

ரஜினியின் இந்த அறிக்கைக்கு கமல்ஹாசன் உள்பட பலர் பலவிதமாக கருத்து கூறி வரும் நிலையில் காங்கிரஸ்
பிரமுகர் ஜோதிமணி கூறியபோது, ‘போர் வருவதற்கு காலம் இன்னும் கனியவில்லை போல! பிறகெதற்கு தமிழக
மக்களுக்கு இந்த இலவச அறிவுரை? பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் தமிழகத்ஹ்டில் தொழில்கள் அழிந்து,
வேலைவாய்ப்புகள் இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்களும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதெல்லாம்
இவருக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியாதே! என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.