போர் வந்தால் ஒருசில நிமிடங்களில் வடகொரியா அழிந்துவிடும்: அமெரிக்கா

போர் வந்தால் ஒருசில நிமிடங்களில் வடகொரியா அழிந்துவிடும்: அமெரிக்கா

ஒருபக்கம் அமெரிக்காவை தாக்கி அழிக்க கூடிய வகையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா, ஒருசில நிமிடங்களில் வடகொரியாவை அழித்துவிடுவோம் என்று கூறி வருகிறது.

இந்த நிலையில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹலே இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அனைத்து நாடுகளும் வட கொரியாவுடனான வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும். பதற்றமான சூழ்நிலையில் போர் மூண்டால் வட கொரியாவை முழுவதும் அழித்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.