போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை: கொரோனா குறித்து விஜயகாந்த்!

தமிழகத்தில் குரானா வைரஸை ஒழிப்பதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பல்வேறு முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா, விஜயகாந்த், போர்க்கால அடிப்படையில்,