போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு விஜயகாந்த் மகன் ஆதரவு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு விஜயகாந்த் மகன் ஆதரவு

சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நான்கு நாட்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு தேமுதிக சார்பில் விஜய் பிரபாகரன் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்பதும் அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா, இரண்டாவது மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.