உக்ரைன் நாட்டில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் நடுவில் ஒரு காதல் திருமணம் நடந்துள்ளது.

உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச்சுவின் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுக்கும், பாதுகாப்பு வீரர் ஒருவருக்கும் காதல் மலர்ந்தது. போராட்டத்தின் நடுவில் காதலர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இதையறிந்த போராட்டக்காரர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

நேற்று காலை போராட்டக்களத்திலேயே அவர்களது திருமணத்தை போராட்டக்காரர்கள் மிகச்சிறப்பாக நடத்தி வைத்தனர். தலைநகர் கீவில் என்ற இடத்தில் உள்ள சிட்டி ஹாலில் போரட்டக்குழு தலைவர் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். மணமக்கள் இருவரும் அனைவரது முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

 

Leave a Reply