போய் வேற வேலையை பாருங்கடா: விஜய் சேதுபதி கூறியது யாரை?

போய் வேற வேலையை பாருங்கடா: விஜய் சேதுபதி கூறியது யாரை?

விஜய் சேதுபதி பொதுவாக பொது இடங்களில் பேட்டி கொடுத்தாலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி கண்ணியத்தை காப்பவர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவரே கடுப்பாகி ஒரு விஷயத்தில் ”போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து செய்தி வெளியிட்ட ஒரு ஊடகம் விஜய் மற்றும் விஜய் விஜய்சேதுபதி உள்பட ஒரு சிலர் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு உதவியாக இருப்பதாகவும் அதற்காக கோடிக்கணக்கான பணம் பெற்றுள்ளதாகவும் பிகில் படத்தில் கிடைத்த கருப்பு பணத்தின் மூலம் மிகப் பெரிய மத மாற்றம் நடந்து உள்ளதாகவும் இதனை உற்று கவனித்து வந்த வருமானவரித்துறை அலுவலகம் அதிரடியாக ரெய்டு செய்ததாகவும் செய்தியாக வெளியிட்டுள்ளது

இந்த செய்திக்குப் பின்னர் தான் ”போய் வேற வேலைய பாருங்கடா” என்று விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply