போயஸ் கார்டனில் சோதனை நடந்ததே எனக்கு தெரியாது: திண்டுக்கல் சீனிவாசன்

போயஸ் கார்டனில் சோதனை நடந்ததே எனக்கு தெரியாது: திண்டுக்கல் சீனிவாசன்

கடந்த ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 200 இடங்களில் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சுமார் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையால் நாடே பரபரப்பில் இருந்தது. ஆனால் இதுகுறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியபோது, ‘நான் இப்பொழுதுதான் தூங்கி எழுந்து வருகிறேன், எனக்கு சோதனை நடப்பதே தெரியாது’ என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 4 மணி நேரம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததால் இரவு முழுவதும் பரபரப்பும் பதட்டமும் பரவியது. இந்த நிலையில் இந்த சோதனை குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஒரு பொறுப்பில் உள்ள அமைச்சர் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வை தெரியாது என்று கூறி தட்டிக்கழிப்பது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply