போதைக்காக மெத்தனால் குடித்த 2 பேர் பலி: ஒருவருக்கு கண் பார்வையும் பறிபோனது

போதைக்காக மெத்தனால் குடித்த 2 பேர் பலி: ஒருவருக்கு கண் பார்வையும் பறிபோனது

கடந்த சில நாட்களாக மதுவுக்கு அடிமையானவர்கள் மதுவுக்கு பதிலாக வேறு சிலவற்றை குடித்து உயிரிழந்து வருகின்றனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

இந்த நிலையில் கடலூர் அருகே மதுவுக்கு பதில் மெத்தனால் குடித்த ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஒருவரும் இன்று இருவரும் என மொத்தம் 3 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு கண் பார்வை பறி போனது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மதுவுக்கு பதில் மாற்று மருந்துகளை குடிக்க கூடாது என்றும் அவ்வாறு குடித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்

Leave a Reply