போக்குவரத்து துறை லாபத்திற்காக அல்ல, அதுவொரு சேவை: துரைமுருகன்

போக்குவரத்து துறை லாபத்திற்காக அல்ல, அதுவொரு சேவை: துரைமுருகன்

போக்குவரத்து துறை எந்த ஜென்மத்திலும் லாபத்தில் இயங்காது என்றும் அந்த துறை சேவை மனப்பான்மையில் இயங்குவது என்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்
தெரிவித்துள்ளார்.

கேள்விநேரத்தின் போது, மினி பேருந்து நிறுத்தம் தொடர்பான விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய அவர், லாபம் நோக்கம் பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மினி பஸ் சேவை கிராம பகுதிகளில் நிறுத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார். பேருந்துகள் இயங்காத வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க யாரும் முன்வராத காரணத்தால், ஆயிரத்து 500 உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply