shadow

 இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குற்றச்சாட்டு

முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் அரசு சொல்லும் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் இருக்கும் பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது

தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா புதிதாக பரவி உள்ளது என்பதும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு பொதுமக்கள் முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதே காரணம் என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இது குறித்து விஞ்ஞானி ஒருவர் கூறியபோது குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனக்குறைவாக இருப்பதாகவும் பொறுப்பற்ற மக்களால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது என்றும் அவர் தெரிவித்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *