பொன் மாணிக்கவேல் விவகாரம்: திமுக – அதிமுக சட்டசபையில் வாக்குவாதம்

பொன் மாணிக்கவேல் விவகாரம்: திமுக – அதிமுக சட்டசபையில் வாக்குவாதம்

பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு தமிழக அரசு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், தமிழக அரசு அவருக்கு எதிராக நீதிமன்றம் சென்றதால் அது ஈகோ பிரச்சினையாக மாறியதாகவும் திமுக சேர்ந்த ஐ பெரியசாமி எம்எல்ஏ சட்டசபையில் குற்றஞ்சாட்டினார்

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கியது என்றும் தேவையான வசதிகளையும் அவருக்கு செய்து கொடுத்துள்ளோம் என்று பதிலளித்துள்ளார்

இந்த விவகாரத்தில் இருவரும் கடுமையான வாக்குவாதம் செய்ததால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply