பொன்.மாணிக்கவேல் நேர்மையானவரா? கமலுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

பொன்.மாணிக்கவேல் நேர்மையானவரா? கமலுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

நேர்மையான அதிகாரிகளுக்கு அழுத்தம் வரத்தான் செய்யும், அதையும் தாண்டி அந்த அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பேட்டியளித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ‘பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? நேர்மையான அதிகாரி என்றால் குற்றச்சாட்டுகளுக்கு பொன்.மாணிக்கவேல் பதில்தர வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் குற்றச்சாட்டுக்களை மேற்பார்வை செய்யத்தான் பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரம் உள்ளது என்றும், குற்றச்சாட்டுகளை எப்படி பதிய வேண்டும் என்று கூற பொன்.மாணிக்கவேலுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply