பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவவதால் மாற்ற முயற்சி: அன்புமணி

பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவவதால் மாற்ற முயற்சி: அன்புமணி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுவதால், அவரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முயற்சிப்பதாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுங்கட்சியில் உள்ள பிரமுகர்களும், எதிர்க்கட்சியில் உள்ள பிரமுகர்களும் சிலை கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் சிறப்பாக செயல்பட்டு வரும் பொன் மாணிக்கவேலை மாற்ற துடிக்கின்றனர்

நாங்கள் கேட்கும் பல விஷயங்களுக்கு சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும், தமிழக காவல்துறையே சிறப்பாக செயல்படும் என்றும் கூறிய தமிழக அரசு, இந்த விஷயத்திற்கு மட்டும் சிபிஐ விசாரணை தேவை என்று கூறுவதால் பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றே தெரிகிறது.

 

Leave a Reply