பொன் மாணிக்கவேல் குறிப்பிட்ட அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? பரவும் வதந்தி

பொன் மாணிக்கவேல் குறிப்பிட்ட அந்த இரண்டு அமைச்சர்கள் யார்? பரவும் வதந்தி

சிலை கடத்தலில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக சிலை கடத்தல் வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நேற்று சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து அந்த இரண்டு அமைச்சர்கள் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் குறிப்பிட்ட அந்த இரண்டு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளியாகி வந்தன. இதனை அடுத்து அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் சிலை கடத்தலில் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்

பொன்மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்கள் இருவர் பெயரை மட்டும் குறிப்பிட்டு பொய் பரப்புரையை ஒருசிலர் செய்து வருவதாகவும் அந்த பேட்டியில் அவர்களின் இருவரும் தெரிவித்தனர்

இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் பொன்மாணிக்கவேல் அந்த இரண்டு அமைச்சர்கள் குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது அந்த இரண்டு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியவர்களா? அல்லது வேறு அமைச்சர்களா? என்பது தெரியவரும்

Leave a Reply