shadow

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள்

தமிழக கோவில்களில் இருந்து சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க விசாரணை அதிகாரியாக பொன் மாணிக்கவேலை சென்னை ஐகோர்ட்டு நியமித்து உள்ள நிலையில் அவருக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் மட்டுமின்றி அறநிலையத்துறை அதிகாரிகளும் எதிராக களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போடுவதை கண்டித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் ஆகியோரிடம் புகார் மனு அளித்து உள்ளனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக சேர்ந்து வந்து பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

பின்னர் இந்து அறநிலையத்துறை இணை-ஆணையர் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிலை கடத்தல் என்று கூறி இதுவரை அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த 10 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன் மாணிக்கவேலால் இந்து அறநிலையத்துறையே முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

பொன் மாணிக்கவேல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிலைகடத்தல் தொடர்பான எந்த வழக்கிலும் அவர் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அவர் பதிவு செய்த வழக்குகளில் எந்த உண்மையும் இல்லை. கோவில்களில் உள்ள அறங்காவலர்களே சிலைகளுக்கு பொறுப்பு என்பதை அவர் உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply