பொன்பரப்பி குறித்த தவறான தகவல் பரப்பினால் குண்டர் சட்டம் பாயும்: அரியலூர் எஸ்.பி. ஸ்ரீனிவாசன்

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவின்போது பொன்பரப்பி பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தவறான மற்றும் ஜாதிவெறியை தூண்டும் வகையில் பதிவுகளை செய்து வருகின்றனர். இதனையடுத்து பொன்பரப்பி சம்பவம் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் குண்டர்சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் எஸ்.பி. ஸ்ரீனிவாசன் எச்சரித்துள்ளார்.

மேலும் வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பொன்பரப்பியில் அமைதி திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply