பொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கிய சிம்புவின் ராஜா

பொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கிய சிம்புவின் ராஜா

‘வந்தா ராஜாவாதான் வருவேன், அதிலும் ரஜினி, அஜித் படங்கள் வெளியாகும் பொங்கல் தினத்தில் வருவேன் என்று வீறாப்பாக விளம்பரம் செய்யப்பட்ட சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் பொங்கல் போட்டியில் இருந்து விலகியுள்ளது.

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்குகளுக்கும் கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களும் புக் ஆகிவிட்ட நிலையில் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

சுந்தர் சி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.