பைக் ரேஸை தடுக்க காமராஜர் சாலையில் தடுப்புகள்: சென்னை போலீசார் அதிரடி

பைக் ரேஸை தடுக்க காமராஜர் சாலையில் தடுப்புகள்: சென்னை போலீசார் அதிரடி

சென்னையில் அடிக்கடி இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு தங்கள் உயிரையும் சாலையில் செல்லும் அப்பாவிகளின் உயிரையும் பலியாக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பைக் ரேஸை தடுக்க ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீஸ் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். குறிப்பாக மெரீனா அருகே உள்ள காமராஜர் சாலையில் 29 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக நேற்று ஒரே நாளில் 242 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply