பேராசை பெருநஷ்டம்: பதுக்கி வைத்த வெங்காயம் முளைத்ததால் வியாபாரி அதிர்ச்சி

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தில் இருந்தது. இதனை அடுத்து வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆனது. இதனால் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது கிலோ வெங்காயம் ரூ.100க்கும் குறைவாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் வெங்காயத்தின் விலை ரூபாய் 300 வரை உயரும் என்று வாய்ப்பு இருந்ததால் வெங்காயத்தை ஒரு சில வியாபாரிகள் பதுக்கி வைத்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே ரூபாய் 200க்கும் மேல் வெங்காயத்தின் விலை ஏறியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பேராசை காரணமாக அதிக அளவில் பதுக்கி வைத்த வெங்காயம் தற்போது முளை விட்டு பயன்படுத்த முடியாத நிலைக்கு போய்விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

பேராசையால் பெரு நஷ்டம் ஆகி தற்போது அந்த வெங்காயத்தை விற்க முடியாமல் கீழே கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

வெங்காயத்தை பதுக்காமல் சரியான விலையில் விற்பனை செய்து இருந்தால் யாருக்கு வியாபாரிக்கும் லாபம் கிடைத்திருக்கும் பொதுமக்களுக்கும் பலன் அடைந்திருப்பார்கள். ஆனால் தற்போது பேராசை காரணமாக பெருநஷ்டம் ஆகிய பல வியாபாரிகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply