பேரறிவாளனுக்கு கொடுத்த அனுமதியை சசிகலாவுக்கு கொடுக்காதது ஏன்? கருணாஸ்

பேரறிவாளனுக்கு கொடுத்த அனுமதியை சசிகலாவுக்கு கொடுக்காதது ஏன்? கருணாஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவருக்கு அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதி அளித்துள்ள நிலையில் சசிகலாவுக்கு பரோல் கொடுக்கும்போது மட்டும் கடுமையான நிபந்தனைகள் விதித்தது ஏன் என்று திருவாடனை எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று தலைமைச்செயலகம் வந்த கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘சசிகலா பரோலுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் ஆச்சரியம் அளிக்கிறது. ஏற்கனவே பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கே அரசியல் தலைவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கே அப்படி இருக்கும் போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று தற்போது பரோலில் வந்துள்ள சசிகலா எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்க கூடாது என்று நிபந்தனை விதித்தது ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியால் சினிமா முடங்கிப் போகும் நிலை வந்துவிட்டது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.