பேனர் வைத்த அதிமுக நிர்வாகி எங்கே? தனிப்படை அமைத்த போலீசார்

பேனர் வைத்த அதிமுக நிர்வாகி எங்கே? தனிப்படை அமைத்த போலீசார்

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்ற கேள்வி எழுந்த நிலையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயகோபால் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் ஜெயகோபால் இல்லாத‌தால் ஏமாற்றம் அடைந்த போலீசார் அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.

ஆளுங்கட்சி நிர்வாகிக்கு எதிராக அமைக்கப்பட்ட தனிப்படை சரியாக செயல்படுமா? என சமூக வலைத்தள பயனாளிகள் சந்தேகத்தை எழுப்பினாலும், நீதிமன்றம் இந்த விஷயத்தில் கறாராக இருப்பதால் விரைவில் ஜெயகோபால் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply