பெரிய தொகையுடன் பரிசு: ஹீரோ நிறுவனம் அளித்த விருப்ப ஓய்வு திட்டம்

பெரிய தொகையுடன் பரிசு: ஹீரோ நிறுவனம் அளித்த விருப்ப ஓய்வு திட்டம்

40 வயதை எட்டிய ஊழியர்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் பணியில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டால் பெரிய தொகையுடன் பல்வேறு பரிசுகளும் தரவிருப்பதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி தொடர்ந்து 5 ஆண்டுகள் ஹீரோ நிறுவனத்தில் வேலை பார்த்த 40 வயதை எட்டிய ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்றும் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அவர்களது பணி அனுபவம் மற்றும் வயதை அடிப்படையாக கொண்டு பெரிய தொகை ஒன்று வழங்கப்படும் என்றும், இந்த தொகையுன் பரிசுகள், ஹீரோ தயாரிப்பு பொருட்களுக்கு சலுகைகள், மருத்துவ வசதிகள், கார் மற்றும் லேப்டாப்க்கு சலுகை, வாரிசுகளுக்கு ஹீரோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு, போன்ற பல பலன்களும் உண்டு என அறிவித்துள்ளது

இந்த சலுகையை செப்டம்பர் 28ஆம் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என ஹீரோ நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply