பெரியார் சிலை உடைத்தது யார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

பெரியார் சிலை உடைத்தது யார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் இந்த சிலையை உடைத்ததற்காக கடும் கண்டனம் தெரிவித்த பா.ம.கவின் முன்னாள் நிர்வாகி ஒருவரே உடைத்திருப்பதாக தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தை அடுத்த கலியப்பேட்டை என்ற பகுதியில் சமீபத்தில் பெரியார் சிலை மர்ம நபர்களால், சேதப்படுத்தப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதேபகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் மேற்கொண்ட விசாரணையில், பா.ம.க முன்னாள் ஒன்றிய செயலாளர் தாமோதரன், பெரியார் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, தாமோதரனை போலீசார் கைதுசெய்தனர்.

பெரியார் சிலை உடைப்பிற்கும் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் நேற்று கண்டனம் தெரிவித்த நிலையில் அவருடைய கட்சி தொண்டர் ஒருவர்தான் அந்த சிலையை உடைத்ததாக இன்று வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது

Leave a Reply