பெண்ணுக்கு பயன்படுத்திய ஆக்சிஜனை விஐபிக்கு மாற்றிய மருத்துவ ஊழியர்கள்: பெண் பரிதாப பலி

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டி கொண்டிருந்த ஆக்சிஜனை விஐபி ஒருவருக்கு தேவைப்படுகிறது என்பதால் அந்த ஆக்சிஜனை மருத்துவ ஊழியர்கள் எடுத்துக் கொண்டு சென்றன்ர்

தனது தாயின் உயிருக்கு ஆபத்து என்றும் ஆக்சிஜனை எடுக்க வேண்டாம் என்றும் அந்த பெண்ணின் மகன் மருத்துவ ஊழியர்களின் காலில் விழுந்து கெஞ்சி உள்ளார்

ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அந்த ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு சென்றதால் அந்த பெண் இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் மருத்துவ நிர்வாகம் இதனை மறுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் நடந்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

Leave a Reply