பெண்களுக்கு மட்டும் 10% தள்ளுபடி: ஒரு ஓட்டல் அதிபரின் அதிரடி அறிவிப்பு

தனது ஓட்டலில் சாப்பிட வரும் பெண்களுக்கு 10% தள்ளுபடி என ஹோட்டல் அதிபர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரையைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர் தனது ஓட்டலில் முன் ஒரு போர்டு மாட்டி உள்ளார். அதில் தமிழக அரசின் காவல் துறையின் ‘காவலன்’ என்ற செயலியை இன்ஸ்டால் செய்திருக்கும் பெண்களுக்கு தங்கள் ஹோட்டலில் சாப்பிடும் பில்லில் இருந்து 10% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த செயலி தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு என உருவாக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நேரங்களில் இந்த செயலியின் மூலம் தகவல் கொடுத்தால் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண் இருக்கும் பகுதிக்கு காவல்துறையினர் சென்று அவருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்

இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு மிக முக்கிய தேவையான இந்த செயலியை தங்களுடைய மொபைல் போனில் இன்ஸ்டால் செய்யும் பெண்களுக்கு 10% தள்ளுபடி என ஹோட்டல் அதிபர் அறிவித்து உள்ளதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply