பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ நிறுவனம்: அசத்தல் பெண்மணி

பெண்கள் ஆட்டோவில் செல்லும்போது பாதுகாப்பு குறைவாக இருப்பதாக பல சமயங்களில் பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. அந்த வகையில் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் எம் ஆட்டோ என்று இந்த ஆட்டோ நிறுவனத்தின் சிஇஓ யாஸ்மின் தெரிவித்துள்ளார்

பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் இந்த ஆட்டோவில் சுமார் 400 பெண்கள் பணிபுரிவதாகவும் இந்தியாவிலேயே அதிக பெண்கள் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரியும் நிறுவனம் எம்.ஆட்டோ நிறுவனம் தான் என்றும் யாஸ்மின் தெரிவித்துள்ளார்

இந்த ஆட்டோவில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை உணர்கிறார்கள் என்றும் இந்த நிறுவனத்தை சென்னை தவிர மற்ற நகரங்களிலும் விரைவில் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக யாஸ்மின் தெரிவித்துள்ளார் யாஸ்மின் இந்த புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply