பெட்ரோல், டீசல் விலை இறங்காதது ஏன்? பொதுமக்கள் அதிருப்தி

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் கடந்த 14 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.49 எனவும் டீசல் விலை ரூபாய் 94.39 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்கி வந்த போதிலும் சென்னையில் பெட்ரோல் விலை இறங்காமல் அதே நிலையில் உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் விலை ஏறியது போலவே இறங்கவும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்