பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக அரசு கலால் வரியை உயர்த்திய போதே பெட்ரோல் விலை ரூ 100 ஐ எட்டும் என எச்சரித்தேன் என்றும், மத்திய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய வரியை சரியாக தரவில்லை என்றும், இதுவரை இல்லாத அளவுக்கு மாநில உரிமை, வருவாய் மத்திய அரசு பறிக்கிறது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.