பெங்களூரில் பிரகாஷ்ராஜின் விசில் ஒலிக்குமா?

பெங்களூரில் பிரகாஷ்ராஜின் விசில் ஒலிக்குமா?

வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடவுள்ள நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை கொடுத்துள்ளது. இந்த சின்னம் தனக்கு கிடைத்து இருப்பது பெரிய மகிழ்ச்சி என்றும் இந்த சின்னத்தை விரைவில் மக்களிடம் எடுத்து செல்வேன் என்றும் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.

மத்திய பெங்களூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்பி மோகன் மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில் அவரை எதிர்த்து சுயேட்சையாக பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். இப்போதைக்கு பிரகாஷ்ராஜுக்கு ஆம் ஆத்மி கட்சி மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளது. காங்கிரஸ் உள்பட பெரிய கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.