பெங்களூரில் திடீரென சாய்ந்த 5 மாடி கட்டிடம்: பைசா கோபுரம் போல் இருப்பதால் பரபரப்பு Banglore 5 storey building in trouble

பெங்களூரில் திடீரென சாய்ந்த 5 மாடி கட்டிடம்: பைசா கோபுரம் போல் இருப்பதால் பரபரப்பு

பெங்களூரில் உள்ள ஹெப்பால் கேம்பபுரா என்ற பகுதியில் உள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்று நேற்று திடீரென சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஐந்து மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் 8 குடும்பங்களில் உள்ள 35 பேர் வாழ்ந்து வருவதாகவும் கட்டிடம் திடீரென சாய்ந்ததை அடுத்து அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன

இந்த கட்டிடம் சாய்ந்தால் எதிரில் உள்ள கட்டிடங்களும் பாதிக்கப்படும் என்பதால் எதிர் வீட்டில் உள்ள குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் இந்த கட்டிடத்தின் சொந்தக்காரருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த கட்டிடம் கட்டிய 5 வருடங்கள் ஆகின்றது என்றும் தரமற்ற முறையில் கட்டியதால் தான் இவ்வாறு கட்டிடம் சாய்ந்து அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.