புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு!

புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் குண்டுவெடிப்பு!

கடந்த சில நாடுகளுக்கு முன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஒன்றின் தற்கொலை படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியான சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் அனைவர் மனதில் இருந்து நீங்கவில்லை

இந்த நிலையில் நேற்று மீண்டும் ஜம்மு-காஷ்மீரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

ஜம்முகாஷ்மீர் மாநிலட்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா என்ற பகுதியில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply