புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சண்டை: 4 ராணுவ வீரர்கள் மரணம்

புல்வாமா பகுதியில் துப்பாக்கிச்சண்டை: 4 ராணுவ வீரர்கள் மரணம்

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சமீபத்தில் திவீரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் இன்று அதே பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய வீர்ர்கள் 4 பேர் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

புல்வாமாவின் பிங்லான் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ராணுவ மேஜர் என்றும், பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து தாக்கியபோது இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

 

Leave a Reply