புல்வாமா தாக்குதல் எதிரொலி: நடிகர், நடிகைகள், பாடகர்களுக்கு தடை!

புல்வாமா தாக்குதல் எதிரொலி: நடிகர், நடிகைகள், பாடகர்களுக்கு தடை!

புல்வாமாவில் சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஒன்று நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடுமுழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் அனைத்திந்திய திரைப்படப் பணியாளர்கள் சங்கமும் இணைந்து நிற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது எந்த திரைப்பட நிறுவனமாவது பாகிஸ்தான் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருந்தால் அவர்களை வெளியேற்றுமாறும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.