புரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் படுதோல்வி

புரோ கபடி போட்டி தொடரின் இன்றைய லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி படுதோல்வி அடைந்தது. டெல்லி அணி 50 புள்ளிகளும். தமிழ் தலைவாஸ் அணியின் 34 புள்ளிகளும் பெற்றதால் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

இன்று நடைபெற்ற அடுத்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி புனே அணியை வீழ்த்தியது. பெங்கால் அணி 42 புள்ளிகளும் , புனே அணி 39 புள்ளிகளும் பெற்றன.

இன்றைய போட்டியின் முடிவுக்கு பின்னர் டெல்லி, பெங்களூரு, ஹரியானா, பெங்கால், ஜெய்ப்பூர் ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *